கனடா இந்திய கூட்டு தயாரிப்பாக “ நேத்திரா” என்னும் திரைப்பட இசைத்தட்டு வெளியீட்டு விழா(photo/video)

கனடா இந்திய கூட்டு தயாரிப்பாக “ நேத்திரா” என்னும் திரைப்படம் 2018ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கின்றது. இப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 2ம் திகதி 50 Hallcrown pl, Armenian Youth Centre, Canada இல் SWETHA CINE ARTS ENTERPRISES இன் தயாரிப்பாளர்களான திரு.திருமதி பரராஜசிங்கம் நிரோதினி தம்பதியினரினால் அருமையாகவும் மிகவும் நேர்த்தியாகவும் நடாத்தப்பட்டது.

இப்படத்தின் இயக்குனர் திரு. வெங்கடேஷ் அவர்களும், இசையமைப்பாளராக, திரு. சிறிகாந்த் தேவா அவர்களும், கதாநாயனாக தமன் குமார் அவர்களும், கதாநாயகியாக சுபிக்‌ஷா அவர்களும் மற்றும் கனேடிய இந்திய நடிகர் நடிகைகளுமாக இணைந்து ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். இவ் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் கனேடிய இந்திய கலைஞர்கள் குழாமே இணைந்து நடனங்களையும் திரைப்படப் பாடல்களையும் “அக்னி” இசைக்குழுவுடன் இணைந்து பிரமாதமாதமான முறையில் நடத்தி முடித்தார்கள். இத் திரைப்படத்தின் கதாநாயகன் திரு. தமன் அவர்கள் எதுவித பாகு பாடும் இல்லாமல் மேடையில் எமது கலைஞர்களுடன் இணந்து நடனம் ஆடியது, அவர்கள் எமது கலைஞர்களின் திறமைகளுக்கும் மதிப்பளிக்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

அந்த நிகழ்வில் குறிப்பிடப்பட்ட அருமையான விஷயம் ஒன்று ஏன் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை இந்தியாவில் செய்யாமல் எதற்காக கனடாவில் செய்கின்றீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் “ கனடாவிலிருந்து 27 நமது கலைஞர்கள் பங்குகொண்டிருக்கின்றார்கள் அவர்களைக் கௌரவிப்பதென்றால் கனடாவில் தான் இந்நிகழ்வை நடத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றார்” எவ்வளவு அருமையான மதிப்பளிப்பு நம்மவரால் நம்மவர்களுக்கு. இந்நிகழ்வின் ஒரு சிறப்பம்சமாக தயாரிப்பாளர் திரு. வெங்கடேஷ் அவர்களும், இசையமைப்பாளர் திரு. சிறிகாந்த் தேவா அவர்களும் மக்களோடு மக்களாக இணைந்து வெளிப்படையாகவும் நகைச்சுவையாகவும் உரையாடி பழகியது மிகவும் வரவேற்கத்தக்கது.

ஒரு கட்டத்தில் இருவருமே வெளிப்படையாகக் கூறினார்கள் வெளி நாடுகளில் இந்தியத்திரைப்படங்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டு கூடிய அளவு வசூலையீட்டித் தருவது இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு இருந்தமை தான் முக்கிய காரணம் என்று கூறினார்கள். இவ்வளவு காலமும் இந்தியத் திரைப்பட உலகத்திற்கருகில் எம்மால் அணுக முடியாது என்ற நிலை மாறி வருவதையிட்டும் இலங்கைத் தமிழர்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபித்து வருகின்றோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. நாடு விட்டு நாடு கடந்து வந்தாலும் எமது திறமைகளை எடுத்து காட்டுவதோடு நின்று விடாமல் எமது அடுத்த தலைமுறையையும் எங்களால் இயன்றளவு தயார்ப்படுத்தி அவர்களது வித்தியாசமான திறமைகளையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். நமது இலங்கைத் தமிழர்கள் இன்னும் பல மைல் கற்களைத் தமதாக்கிக் கொள்ளவேண்டும் என்று தமிழ் சிஎன்என் குடும்பம் மனமார வாழ்த்துகின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்