எஸ்.ரி.சீலனின் ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறு வட்டு வெளியீடு.(photos)

தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் மனித வள அபிவிருத்திச் சபையின் உதவிப்பணிப்பாளரும் வெள்ளிச்சரம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சி.தணிகசீலன் (அகில இலங்கை சமாதான நீதவான்) அவர்களின் “ஊர்க்குருவியின் உலா” எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி மார்கழி மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் செயலாளர் வே.தவராசா அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும்ரூபவ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் ஆகியோரிடம் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பேராசிரியர் மா.செல்வராசா முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் இலக்கியவாதி எழுத்தாளர் முன்னாள் மாவட்டச் செயலர் உடுவை எஸ் தில்லைநடராசா ஆகியோர் முன்னிலை வகிக்க கலாநிதி க.பிரேமகுமார் சிரேஷ்ட விரிவுரையாளர் முன்னால் உபவேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி க.இராஜேந்திரன் சிரேஷ்ட விரிவுரையாளர் முன்னாள் பீடாதிபதி கிழக்குப் பல்கலைக்கழகம் வைத்திய நிபுணர் க.அருளானந்தம் சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் எந்திரி.ந.சிவலிங்கம் மாவட்ட உதவி ஆணையாளர் கமநல அபிவிருத்தித் திணைக்களம மட்டக்களப்பு வைத்தியக் கலாநிதி கு.சுகுணன் வைத்திய அத்தியட்சகர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை கலாநிதி சு.சிவரெட்டினம் சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
திருமதி.சுரேஸ் ஜெயப்பிரபா சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம் திரு.சோ.ஜெகநாதன் துறைத்தலைவர் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் சைவப் புரவலர்.வி.ரஞ்சிதமூர்த்தி ஆகியோருடன் ச.நவநீதன் முன்னாள் மாநகர ஆணையாளர் கோ.கருநாகரன் முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர் மற்றும் புத்திஜீவிகள் கலைஞர்கள் ஊடகவியலாளர்கள் ஆர்வலர்கள் இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்;.

இந்த கவிதை வெளியீட்டு நிகழ்வில் ஆசியுரையினை சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் பீடதிபதி காயத்திரிபீடம் மட்டக்களப்பு அவர்கள் வழங்கிவைத்தார். ஆத்துடன் இந்த நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதி சிவயோகச்செல்வன் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட அவர் அதனைத் தொடர்து கௌரவிக்க அழைக்கப்பட்டோரிடமும் கௌரவிக்கப்பட்டோர் கலந்து கொண்ட அதிதிகளுக்கும் என புத்தகத்தின் பிரதிகள் வழங்கி இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. ஆதனைத் தொடர்ந்து ஆசிரியரினால் நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு புத்தகங்கள் ஆசிரியரினால் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தக வெளியீட்டை சிறப்பிக்கும் முகமாக கௌரவிப்பு நிகழ்வுகளும் கலை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் எமது மண்ணின் பொக்கிசங்களாக இருக்கும் சமகாலத்தில் அரங்குகளின் பக்கம் அழைத்துவரப்படாத மாஸ்டர் சிவலிங்கம் கவிஞர் பண்டிதர் வாகரை வாணன் கலாபூசனம் தேனூரான் ஆகியோர் முறையே கலைக்கோன் கவிக்கோன் மற்றும் கலைச் சக்கரவர்த்தி என இந்நிகழவில் பேர் சூட்டி பொன்னாடை போற்றி ஆசிரியர் சி.தணிகசீலனின் பெற்றோர்களான திரு.திருமதி பொ.சிவகுரு அவர்களால் மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நூல் ஆசிரியரை ஆசீர்வாதப்படுத்தியதுடன் இந்த நிகழ்வை குன்றில் விளக்காய் ஒளிரச் செய்து சிறப்பித்திருந்தார். அவர்களிடம் ஆசிரியரின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட கவிதைகள் அடங்கிய இறு வட்டு “மட்டு மண்ணே வணக்கம்” எனும் பெயரில் வெளியிட்டு வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குலை நிகழ்வுகளாக செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியர் திருமதி.சருமிளா பிரபாகரன் அவர்களுது மணவக் குழுவுடன் பிள்ளையார் நடனம் மீன்மகள் பாடுகிறாள் போன்ற குழு நடனங்களை மண்வாசணை மணக்கும் வண்ணம் அரங்கேற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அறிமுக உரை மற்றும் ஆய்வுரையினை க.மோகனதாசன் சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப்பல்கலைக்கழகம் அவர்கள் செவ்வனே நிகழ்த்திவைத்தார். இந்நிகழ்வினை ச.இன்பராசன் உதவிப் பணிப்பாளர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு செல்வி குளோறியா மற்றும் ச.இரவிச்சந்திரன் ஆகியோர் அழகாக தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஒன்றன் பின் ஒன்றாக அதிதிகள் உரைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் இறுதியாக நூலாசிரியர் எஸ்.ரி.சீலன் அவர்களின் ஏற்புரையுடன் இனிதே நிறைவுற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்