மன்னார் மாவட்டத்தில் போதைப்பொருள் வினியோகம்,குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல் பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு

மன்னார் மாவட்டத்தில் போதைப்பொருள் வினியோகம்,குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களுக்கு எதிராக செயல் பட்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு-(படம்)
மன்னார் நிருபர்
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை கஞ்சா,ஹேரோயின் போதைப்பொருட்கள் வினியோகம்  மற்றும் குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை(5) கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று (5) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கொன் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும், குற்றச் செயல்களுடன் ஈடுபட்டவர்களை கைது  செய்த பொலிஸ் அதிகாரிகள் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதோடு, பணப்பரிசு மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கொன் அவர்களினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வகளில் , பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்