தேர்தல் தில்லாலங்கடிகள்…….

ஊழல் மறுத்தல்
உள்ளால் அறுத்தல்
காலை வாரி விடல்
மாலை போடல்
கீழே தள்ளி விடல்
கிடைத்ததை சுருட்டல்
கூலிக்கு மாரடித்தல்
கூட்டத்தில் கத்தல்
கேலி செய்தல்
கேள்வி கேட்டல்
சாலை மறித்தல்
சண்டித்தனம் புரிதல்
சீலை கொடுத்தல்
சிரமதானம் செய்தல்
வால் பிடித்தல்
வாளி கவிழ்த்தல்
வேலை கொடுத்தல்
வேடுவரை சந்தித்தல்
என்று தொடரும்
இனி வரும் நாட்கள்

வட்டார வெறிகள்
விட்டு விட்டுப் பாயும்
மட்ட ரக வார்த்தைகள்
மா நாட்டை உலுக்கும்

போஸ்டர் போட்டோ
புன்னகை புரியும்
நோட்டிஸ் கட்டு
நுளம்பாய்ப் பறக்கும்

கருத்து மோதல்கள்
காதைக் கிழிக்கும்
தெருத்தெருவாக
தேர்தல் ஒலிக்கும்

நல்லவர் சிலரும்
நன்முறை நடந்து
உள்ளூராட்சியை
வெல்ல முனைவார்

தேர்தல் என்பது
தெரிதல் என்பதால்
யாரும் முனைவார்
எதிர்ப்பவரை அடக்க….!

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்