நடுக்கடலில் மம்முட்டி படத்தின் 7௦% படப்பிடிப்பு..!

சில வருடங்களுக்கு முன் வரலாற்று பின்னணியில் ‘உருமி’ படத்தை இயக்கிய சந்தோஷ் சிவன், அதே காலகட்டத்தில் வாழ்ந்த கடற்படை தலைவனான குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை அடுத்ததாக இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் துவங்க உள்ளதாம்.

கடற்கொள்ளையர்கள் பற்றிய கதை என்பதால் இந்தப்படத்தின் 7௦% படப்பிடிப்பு நடுக்கடலில் தான் படமாக்கப்பட இருக்கிறதாம். படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் அவை உலகத்தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்களை அழைத்துள்ளாராம் சந்தோஷ் சிவன். இந்தப்படம் சுமார் 5௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்