போதையற்ற நாட்டை உருவாக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்!

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் தேசிய வேலைத்திட்டம் பொலிஸாரால் யாழ்ப்பாணத்தில் இன்று(06) காலை ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு போதைப் பொருள் பாவனைக்கு ஒழிக்கும் விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மைக்காலமாக வடக்கில்  போதைப்பொருட்கள் கடத்தல் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளநிலையில் ஏ9 வீதியில் பொலிஸாரினால் வீதிச்சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்