பிரித்தானிய பிரதமரை கொலைசெய்ய முயற்சி.

பிரித்தானிய பிரதமராக பதவிவகிக்கும் தெரசா மேயை கொலைசெய்வதற்காக டவுனிங் தெருவில் அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி பொலிசார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இவ் அறிக்கையில் கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி தீவிரவாத ஒழிப்பு படையினர் 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் வடக்கு லண்டனை சேர்ந்த ஜகரியா ரெஹ்மான் (வயது 20) மற்றும் தென்கிழக்கு பிர்மிங்காம் நகரை சேர்ந்த முகமது அகீப் இம்ரான் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களை வெஸ்ட்மின்ஸ்டெர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று முன்நிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலும் பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை கொலை செய்ய நடந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12 மாதங்களில் மட்டும் 9 சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தெரசாவின் செய்தி தொடர்பு அதிகாரி நேற்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்