ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்டு: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் ஸ்டார்க், ஹேசல்வுட் ‘வேகத்தில்’ அசத்த ஆஸ்திரேலிய அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 442(‘டிக்ளேர்’), இங்கிலாந்து 227 ரன்கள் எடுத்தன. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 138 ரன்கள் எடுத்தது. 354 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் (67), வோக்ஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஸ்டார்க் மிரட்டல்:

இன்று கடைசி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. ஹேசல்வுட் ‘வேகத்தில்’ வோக்ஸ் (5) ஆட்டமிழந்தார். ரூட் முந்தைய நாள் ஸ்கோருடன் (67) திரும்பினார். மொயீன் அலி 2 ரன் மட்டும் எடுத்தார். ஸ்டார்க் ‘வேகத்தில்’ ஓவர்டன் (7), பிராட் (8), பேர்ஸ்டோவ் (36) சிக்கினர். முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 2–0 என தொடரில் முன்னிலை பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 14ம் தேதி பெர்த்தில் துவங்குகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்