தலைவர் பதவியிலிருந்து விமல் விலகவேண்டும்! – வலியுறுத்துகிறார் பியசிறி 

“தேசிய சுதந்திர முன்னணியானது வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. எனவே, கட்சியை மீட்டெடுக்கவேண்டுமானால் தலைமைப் பொறுப்பியிலிருந்து விமல் வீரவன்ஸ விலகவேண்டும்.”
– இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
“தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளேன் என கட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. உரிய நடைமுறையைப் பின்பற்றி என்னை பதவி நீக்கம் செய்யவில்லை. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளேன். நிலைமையைத் தெளிவுபடுத்தி தேர்தல் ஆணையாளர் ஊடாக கட்சித் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளேன்.
அதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியானது இன்று வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. நெருக்கடியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமானால் தலைவர் பதவியை விமல் வீரவன்ஸ எம்.பி. துறக்கவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்