வெள்ளியன்று ஈ.பி.டிபியுடன் மைத்திரி மீண்டும் பேச்சு!

வெள்ளியன்று ஈ.பி.டிபியுடன் மைத்திரி மீண்டும் பேச்சு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (ஈ.பி.டி.பி.) இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி. பிரதிநிதிகளும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடல், ஆசனப்பங்கீடு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளன.
ஈ.பி.டி.பி. எந்தெந்தத் தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும், எந்தெந்தத் தொகுதிகளில் இணைந்து போட்டியிடும் என்ற விவரத்தை டக்ளஸ் தேவானந்தா எம்.பி., சு.க. பிரமுகர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.
இது தொடர்பில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தமது தரப்பு நிலைப்பாட்டை எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளனர். இருதரப்புக்குமிடையிலான சந்திப்பு மறுபடியும் 8 அல்லது 9ஆம் திகதி நடைபெறும் எனத் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கை சின்னத்திலேயே களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், கூட்டணி அமைத்துக் களமிறங்கும் பட்சத்தில் வெற்றிலை சின்னத்திலேயே முன்னிலையாக வேண்டும் என்பதே டக்ளஸ் தரப்பின் விரும்பமாக இருக்கின்றது.
…………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்