மஹிந்த அணியினர் மைத்திரியுடன் ‘டீல்’! – 5 பேர் இரகசியப் பேச்சு; விரைவில் இணைவு 

மஹிந்த அணியான பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐந்து பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப் பேச்சுகளை நடத்தியிருக்கின்றனர். இன்னும் சில தினங்களில் அவர்கள் அரசுடன் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
மஹிந்த அணியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே இவர்கள் ஜனாதிபதி மைத்திரியுடன் இணையவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத பொது எதிரணியின் எம்.பி. ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வரும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தேசித்திருப்பதாகவும் அறியமுடிகிறது. பெரும்பாலும் வரவு  செலவுத்திட்ட இறுதிநாள் விவாதத்தின்போது இவர்கள் அரசுப்பக்கம் தாவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்