திருகோணமலையில் – டெங்கு நோய் மூலம் இவ்வருடத்தில் 4956 பேர்

ஆர்.சுபத்ரன்

திருகோணமலையில் டெங்கு நோய் மூலம் இவ்வருடத்தில் 4956 பேர் பாதி;க்கப்பட்டுள்ளனர்.தற்போது இடம் பெற்றுவரும் மழையுடன் கூடிய காலநிலையில் டெங்கு நோய் பரவக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார பணிமனை தெரிவிக்கின்றது.
தற்போது காலநிலை சீர்கேடுகாரணமாக நவம்பர் மாதத்தில் 111 டெங்கு நோயாளிகள் மாவட்ட ரீதியாக அடையாலம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.இது கடந்த செப்டம்பர் 68 ஒக்டோபர் 71 ஆகிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகமாக காணப்படகிறது.
இதற்கு பருவமழை ஒரு காரணமாக அமைகிறது.எனவே நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை கண்டுபிடித்து சுற்றுச் சூழலை சுத்தமாக பேணுமாறு அறிவுருத்தப்படகிறது.
இதே வேலை திருகோணமலை நகர எல்லையில்  கடந்த டிசப்டம்பர் 21 டெங்கு நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 22 டெங்கு நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 17 டெங்கு நோயாளிகளும் அடையாலம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்