பொது நிகழ்வுகளில் தமிழர் பாரம்பரியம் பேணப்படுதல் வேண்டும் – மாகாண சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.

வவுனியா  செய்தியாளர்  T. Sivakumar

பொது நிகழ்வுகள் நடைபெறும்போது தமிழர்களின் பாரம்பரியம் பேணப்படுதல் வேண்டும். குறிப்பாக வரவேற்பு நிகழ்வகளில் மேலைத்தேய வாத்தியங்கள் இசைக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு தமிழர் பாரம்பரிய வாத்திய கருவிகளான இன்னிய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கான குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா ஒரு இலட்சத்து 52 ஆயிரம் பெறுமதியான பொருட்கள் இன்று (07.12) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர் கௌரவிப்பும் நடைபெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்