நாச்சியார் வசனத்தால் பாதிக்கப்பட்டது யார்? கோர்ட் கேள்வி

பாலா இயக்கத்தில், ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் குமார் நடித்துள்ள படம் நாச்சியார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை ஒன்று சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிகா, பாலா மீது கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை தர வேண்டும் என வழக்கு தொடர்ந்த இந்திய குடியரசுகட்சியின் தலித் பாண்டியனுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜன., 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்