நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு

நல்லாட்சி அரசாங்கத்தில் எரிபொருள் விலை குறைப்பு
சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் 2014ஆம் ஆண்டு இறுதியிலிருந்து 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எரிபொருள் உற்பத்தி விலை குறைவடைந்திருந்தது.
இதன் இலாபத்தை மக்களுக்கு வழங்கும் நோக்கத்தில் நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச எண்ணை விலை குறைவடைந்தமைக்கேற்ப 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதமே உள்நாட்டு எண்ணை விலையை குறைத்தது.
இதற்கமைவாக 92பெற்றோல்  ரூபா 150லிருந்து 117ஆக  குறைவு
95பெற்றோல்ரூபா158லிருந்து128ஆக குறைவு
ஒடோடீசல்ரூபா111லிருந்து95ஆக குறைவு
சூபர்டீசல்ரூபா133லிருந்து110ஆக குறைவு
மண்ணெண்னை ரூபா 81லிருந்து44ஆக விலை குறைவடைந்தன…
தற்போது சர்வதேச கச்சா எண்ணை விலை உயர்ந்து கொண்டு செல்கிறது. ஆனால் 2015ஆம் ஆண்டு குறைக்கப்பட எண்ணை விலைக்கேட்பவே தற்போது எரிபொருள் விநியோகம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  எனினும் இது ஒரு கடினமான விடயமாக கருதப்படுகின்றது.
எரிபொருள் ஒருலீட்டரில் ஏற்படுகின்ற நட்டம்
2017ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து -ஒக்கேடாபர் மாதம் வரையான காலப் பகுதியில் எரிபொருள் விற்பனையைப் பார்க்கும் போது இலங்கை பெற்றோலிய கூட்டடுத்தாபனத்திற்கு ஒக்டேன் பெற்றோல் 92இன் ஒருலீட்டரில் 10ரூபாவிலிருந்து 74ரூபா வரை நட்டமாகும்.
ஒக்டேன் பெற்றோல் 95இன் ஒருலீட்டரில் 9ரூபா 88சதம் வரை நட்டம்.
கூட்டுத்தாபனத்திற்கு ஒடோ டீசல் ஒருலீட்டரில் 2ரூபா 98சதம், மண்ணெண்னை ஒருலீட்டரில் 26ரூபா 80சதம் வரை நஷ்டம் ஏற்படுகின்றன
இந்த நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும்படி எமக்கு பல சந்தர்ப்பங்களில் யோசனைகள் வழங்கப்பட்டாலும் அரசாங்கம் இதுபற்றி எவ்விதமுடிவும் இன்னும் எடுக்கவில்லை. நாங்கள் இதில் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்படும் நட்டத்தைவிட மக்களுக்கு  சேவையை வழங்குவதிலேயே அதிக கவனம் செலுத்திவருகின்றோம்.
கூட்டுத்தாபனத்தின் இலாபம் மற்றும் நட்டம்
இலங்கை பொற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 2015ஆம்ஆண்டு ஏற்பட்ட நட்டம் ரூபா 20.6 பில்லியன் ஆகும்.
ஆனால் கூட்டுத்தாபனம் 2016ஆம் ஆண்டு இலாபமீட்ட ஆரம்பித்தது. இதற்கமைய 2016ஆம் ஆண்;டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெற்ற இலாபம் ரூபா 43 பில்லியன் ஆகும்.
இதுபோல, கூட்டுத்தாபனம் 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை ரூபா 9.9 பில்லியன் இலாபம் ஈட்டியுள்ளது.
எரிபொருள் விலை குறைந்த நிலையிலும் அரசுக்கு பெருந்தொகையான வரிகளை செலுத்தும் வேலையிலேயே கூட்டுத்தாபனம் இந்;த இலாபத்தை ஈட்டியுள்ளது.
இந்த இலாபத்தை பெறமுடிந்தமையானது கூட்டுத்தாபனதின் அதிரிகளின் ஓத்துழைப்பும்  ஊழியர்களின் அர்ப்பணிப்பும் அவர்களின் திறமையுமே காரணமாகும்.
கூட்டுத்தாபனத்தினால் மனியமாக மண்ணெண்னை விநியோகித்தல்
கூட்டத்தாபனத்திற்கு மண்ணெண்னை விநியோகத்திலேயே அதிக நட்டம் ஏற்படுகின்றது. இந்த நாட்டில் வரிய மக்களே அதிகமாக மண்ணெண்னையைப் பாவிக்கின்றனர். ஆனால் எவ்வளவு நட்டம் ஏற்பட்டாலும் அரசாங்கம் என்றவகையில் மண்ணெண்னை விலையை உயர்ந்த எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை.
அரசாங்கம் என்றவகையில் மண்ணெண்னை விநியோகத்தை மக்களுக்கு மானியமாக வழங்கப்படுவதனால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனதற்திற்கு ரூபா 5 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.
வரிய மக்களுக்காகவே மண்ணெண்னையை மானியமாக வழங்குகின்றோம்.
ஆனால் இன்றுவரை இந்த மானியங்களை  சந்தைவியாபாரத்தில் உள்ள ‘மாபியாக்கள்’ சூறையாடுகின்றனர்.
இதில் ஒன்று பஸ் வண்டிகளுக்கு மண்ணெண்னை நிரப்புவது. இந்த நிலையில் 221 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி டீசல் நுகர்வு கிலோ லீட்டர் 38ஆயிரத்து 583ஆக குறைந்துள்ள அதேவேலை மண்ணெண்னை நுகர்வு கிலோ லீட்டர் 15ஆயிரத்து 800ஆக உயர்வடைந்துள்ளது.
கூட்டுத்தாபனத்தினால் கொடுக்கப்பட்ட வரி
2015 ஆம் ஆண்டுக்கான வரி மற்றும் பிற வரிகளாக அரசுக்கு வழங்கப்பட்ட பங்களிப்பு ரூபா 92 பில்லியன் ஆகும்.
இது 2016 ஆம் ஆண்டில் ரூபா 146 பில்லியன் ஆகும்.
2017 ஆம் ஆண்டு செப்டம்பர் முடிவில் 105 பில்லியன் ரூபாய்களை வழங்க முடிந்தது.
கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட வேண்டிய கடன்கள் 
நாட்டில் தேசிய சக்தி வளப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எல்லா துறைகளுக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக எரிபொருள் வழங்கும் பொறுப்பைக் கொண்டது.
இருப்பினும் சில நிறுவனங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ள காலதாமதிக்கின்றன.
இலங்கை கூட்டுத்தாபனத்திற்கு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 திகதி வரை தேசிய மின்சார சபை, இராணுவம், விமான சேவை மற்றும் வௌ;வேறு நிறுவனங்களிலிருந்து ரூபா 67 பில்லியன் வரையான தொகை வழங்கவேண்டியுள்ளது.
இதில் இலங்கை மின்சார சபை ரூபா 48 பில்லியன் வழங்கவேண்டியுள்ளது.
இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மீண்டும் மீண்டும் கடன் வாங்கவேண்டிய நிலை எற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் விநியோகத்திற்காக இரண்டு அரச வங்கிகளில் இருந்து கடன் வாங்கப்பட்டுள்ளது. இக்கடனுக்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மாத வட்டியாக ரூபா ஒரு பில்லியன் செலுத்தவேண்டிய நிலையில்; உள்ளது.
மசகு எண்ணெய் (உராய்வு) பிரச்சினை
2016ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஊராய்வு எண்னை மற்றும் தார் விற்பது தொடர்பான யோசனை முன்வைப்பப்பட்டது.
இதற்கமைய எனது அமைச்சு அமைச்சரவையின் அனுமதியோடு இது தொடர்பாக முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆகவே பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதனை இலாபமீட்டும் வகையில் கொண்டுசெல்வதற்கு 2016ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டவைகளை ஆழமாக கவனம்செலுத்த வேண்டும் என்பதை முக்கிய விடயம் என நான் நம்புகின்றேன்.
தரம்குறைந்த எண்ணை தொடர்பாக 
எரிபொருள் இறக்குமதியில் எண்ணையின் தரம் பற்றி பரிசீலிக்கப்படும்;.
நான் தரம் குறைவான எரிபொருளை இறக்குமதி செய்வதை முற்றிலுமாக தடைசெய்துள்ளோம்.
நான் ஒருபோதும் தரம்குறைவான எரிபொருளை இறக்குமதி செய்ய இடமளிக்கமாட்டேன். மக்களுக்கு பாதிப்பு எற்படும் வகையிலான எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளமாட்டேன். எனக்கு கடந்த காலங்களில் பல்வேறு தரப்பில் இருந்து அலுத்தங்கள் கொடுக்கப்பட்டன ஐ.ழு.ஊ நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட தரமற்ற எண்ணையை நாட்டுக்குள் கொண்டுவர.
ஆனால் நான் அந்த அலுத்தங்களுக்கு மத்தியில் எண்ணையை இறக்குமதி செய்ய இடமளிக்கவில்லை.
பெட்ரோல் நெருக்கடி – முதல் முறையாக 
பெற்றோல் ‘மாபியா’ வால் கடந்த காலத்தில் பெற்றோல் தட்டுப்பாடு இடம்பெற்றது.
குறிப்பாக இந்திய எண்ணைக் கம்பனியின் எண்ணைக் கப்பல் நிராகரிக்கப்பட்டு அடுத்த எண்ணைக் கப்பல் வரும் வரைக்கான கால இடைவெளியில் எம்மிடம் போதுமான எரிபொருள் இருந்தது.
ஆனால் ளு.ஆ.ளு குருஞ்செய்தி மற்றும் சமூகவலைத்தளங்களுடாக பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டதாள் மக்கள் மத்தியில் குழப்பம் எற்பட்டது.
இதனால் மக்கள் மத்தியில் எரிபொருள் நுகர்வு அசாதாரண முறையில் அதிகரித்தது.
அத்தோடு கடந்த காலத்தில் நிறுவன மட்டத்தில் காணப்பட்ட செயற்பாடுகளில் பல குறைபாடுகளும் தென்பட்டன. நான் அது தொடர்பான முக்கியமான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
பெட்ரோல் நெருக்கடி – இரண்டாவது முறையாக 
எனினும், இரண்டாவது தடைவை எந்தவித பெற்றோல் தட்டுப்பாடும் இருக்கவில்லை.
ஆனால் சில குழுக்கள் திரும்பவும் ளு.ஆ.ளு குறுஞ்செய்தியினால் மக்களை பீதியடையச்செய்ய முயற்ச்சித்தனர்.
நான் இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
இதுபோலவே கூட்டுத்தாபனம் சார்பாக எமது அதிகாரிகள் இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைபாடு செய்துள்ளனர்.
எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள்
நான் தெரிவிப்பதானது,
காடந்த நாவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சினையில் விளங்குவது பெற்றோலி கூட்டுத்தாபனத்தின் கீழ் போதுமான சேமிப்பு கொள்கலன்கள் இன்மை.
எனவே பாதுகாப்பு பொறிமுறைக்கமைய போதுமான எரிபொருள் கொள்கலன்கள் இருந்தால் அவசரகால நிலையின்போது இவை பெரும் உதவியாக இருக்கும்.
இதன் காரணமாக 15 மீட்டர் கன அடி கொள்கலன்கள் 03ம்,
07 மீட்டர் கன  அடி கொள்கலன்கள் 02ம்,
05 மீட்டர் கன அடி கொள்கலன்கள் 06ம் கொலன்னாவை எரிபொருள்
களஞ்சியசாலை இடத்தில் நிர்மானிக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.
மேலும், நாம் இப்பிரேதேச எரிபொருள் சேமிப்பு கொள்கலன்களை 11 இருந்து மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
புதிய சேமிப்பு கொள்கலன்கள் ஸ்தாபிப்பது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றனர்.
எண்ணைக்குழாய் 
விமான நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்ய முத்துராஜவெலவில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வரை தேசிய நெடுஞ்சாலையூடாக எரிபொருள் விநியோக எண்ணைக்குழாய்களை பொறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதற்கு முன் முன்மொழியப்பட்ட யோசனையில் வேறு பாதைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அதை நாங்கள் மாற்றி தேசிய நெடுஞ்சாலையூடாக பொறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இதனால் எரிபொருள் எண்ணை விநியோகக் கூழாய்களின் மொத்த நீளத்தில் 4கிலோமீட்டரை குறைத்துள்ளோம்.
அதேவேலை, பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமெரிக்க டொலர் 61 மில்லியன் கணக்கில்  கட்டுநாயக்க விமான நிலைய விமானங்களுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்தை அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகின்றது.
அதேபோல, கூட்டுத்தாபனம் முத்துராஜவெல விமான எரிபொருள் சேமிப்ப கொள்கலனை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தை வினைத்திறனோடு மேற்கொள்ள, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் பாதையில் சக்தி வளம் தொடர்பாக பலயோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையின் தற்போதைய நிலை
நாட்டில் தற்போது இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களின் மொத்த விலையானது நாட்டின் சராசரி வருடாந்திர இறக்குமதி செலவில் 25 முதல் 30 சதவீதம் வரை உள்ளது.
இது நாட்டின் சராசரி ஆண்டுச் செலவுகளில் 50 சதவிகிதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் சுத்திகரிப்பு அமைப்பை தற்போது மேம்படுத்த வேண்டிய  தேவையேற்பட்டுள்ளது.
ஆயினும், இப்போது நமக்கு ஒரே ஒரு சுத்திகரிப்பு நிலையம் மட்டுமே உள்ளது. இது 46 வருடங்களா இயங்கிவருகின்ற பழையான சுத்திகரிப்பு நிலையமாகும்.
இந்நிலையத்தினால் நாட்டின் எரிபொருள் தேவையை நூற்றுக்கு 30 தொடக்கம் 35 வரையான பீப்பாய்கள் மட்டுமே பூர்த்திசெய்யமுடியும்.
இதன் சுத்திகரிப்பு திறன் 50ஆயிரம் பீப்பாய்களாக  திட்டமிட்டாலும் உண்மையில் அதில் இருந்து 30ஆயிரம் இருந்து 35ஆயிரம் வரையான பீப்பாய்களேயாகும்.
இதனால் எமது நாட்டுக்கு மேலும் அதிக சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய தேவைப்பாடு எற்பட்டடுள்ளன.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தும் யோசனை
சபுகஸ்கந்த எண்ணைச் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 2025ஆம் ஆண்டு 1 இலட்சத்து 20ஆயிரம் வரையாக எண்ணைச் சுத்திகரிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கை தற்போது திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு அமெரிக்க டொலர் 2.3 பில்லியன் தொகை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் நாங்கள் புதிய எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவே முழுக்கவனமும் செலுத்தி வருகின்றோம். இதற்காக இதுவரை முதலீட்டாளர்களுடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகின்றன.
சப்புகஸ்கந்தையில் ஒரே வகையான கச்சா எண்ணைப் பயன்படுத்தல்.
சப்புகஸ்கந்தை எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் 2011-2012 ஆண்டு காலப்பகுதியில் ஒரு வகையான கச்சா எண்ணை மட்டுமே உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டது.
அதாவது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசில் அபுடாபி தேசிய எண்ணனை நிறுவனம் ஆரசடியn கச்சா எண்ணையை உற்பத்தி செய்தது.
இதற்கு முன் ஈரான் கச்சா எண்ணை மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஒரேவகையான கச்சா எண்ணைப் பயன்படுத்துவதனால் அந்த கச்சா எண்ணை வகை பெறமுடியாத சந்தர்ப்பத்தில் நாங்கள் பெரும் பிரச்சினைக்கு முகங்கொடுகவேண்டியிருந்தது.
காரணம் 2011-2012 ஆண்டு காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க அரசு ஈரான் நாட்டுக்கு தடைவிதித்தது இதன் விளைவாகவே இந்தப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க நோர்ந்தது.
எனவே, சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்க்கு மாற்று வழிமுறைகளை நாங்கள் இப்போது பரிசீலிக்கிறோம்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ வரையிலான எரிபொருள் குழாய் முறை
தற்போது, 76 வருடகாலமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு 10 அங்குல குழாய் மூலம் எண்ணை விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.
இந்த குழாய் மார்கத்தில் எற்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்ய 18 அங்குல மற்றும் 14 அங்குல புதிய இரண்டு எண்ணைக் குழாய் வழிகள் நிர்மானிப்பதற்கான ஏலம் விடப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த குழாய்த்திட்டங்களை கட்டியமைத்தப் பின்னர், பழைய குழாய் வழியை முழுமையாக புதுப்பிக்கப்படும்.
இப்போது, மற்றொரு 12 அங்குல குழாய் பொருத்தப்பட்டு வருகிறது. 80 சதவீதமான கட்டுமானப் பணிகள் எங்கள் பொறியாளர்களினால் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
எண்ணை அகழ்வு
எனது அமைச்சின் கீழ் பெற்றோலிய தொழிற்துறை ஆய்வு, அகழ்வு மற்றும் உற்பத்தி விநியோகம் என்பவற்றின்; பொறுப்பு எனக்குள்ளது. இதுதொடர்பான செயற்பாடுகள் மேற்கொள்ளும் நிறுவனமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் பெற்றோலியம் வளங்கள் அபிவிருத்தி செயலகம் செயல்பட்டு வருகிறது.
மன்னார் வளைகுடா எண்ணையகழ்வு
கடந்த காலங்களில் மன்னார் வளைகுடா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எண்ணை ஆய்வுகளில் இந்த நாட்டில் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை டோராடோ மற்றும் பெரகூடா பகுதிகளிலாகும்.
இதில் ஒட்டுமொத்த அளவில் இயற்கை எரிவாயு இரண்டு ரில்லியன் அன அடி இயற்கை எரிவாயு காணப்படுகின்றன.
10 மில்லியன் பிபாய்கள் வரையான எண்ணை வளம் காணப்படுகின்றது.
தற்போது அந்த ஆய்வு மேற்கொள்ளும் பகுதியிலிருந்து இயற்கை எரிவாயுவை பிரித்தெடுப்தற்கான முதலீடுகளைளை மேற்கொள்வதற்கான விளம்பரங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
ஒரு வெளிநாட்டு ஆலோசனை நிறுவனம் தற்போது இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள  முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகன மார்க்கெட்டிங் செயல்பாட்டில் ஈடுபடுவருகின்றது. இதற்கு வெளிநாட்டு ஆலோசனைக் குழுவொன்றும் செயற்படுகின்றது.
இதற்கினங்க, மன்னார் வளைகுடா பகுதியில் ஆ2 ஆய்வுகளுக்கான ஆய்வுப் பணிகளை இம்மாதம் மேற்கொள்வதற்கான ஏலம் விடப்படவள்ளது.
ஏற்கனவே 11 சர்வதேச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான விருப்பங்களை தெரிவித்துள்ளன.
இந்த இயற்கை எரிவாயு வளங்களின் மூலமான வர்த்தக வளர்ச்சியை ஸ்தாபிப்பதனால் இலங்கையில் வர்த்தக அபிவிருத்தியை மேற்கொள்ளமுடியும் இதனால் 2021 ஆம் ஆண்டில், ஆ2 ஆய்வுப் பகுதியில் வர்த்தக நோக்கத்தில் உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பிக்கக் கூடிய சந்தர்ப்பமும் உருவாகும்.
அதேபோல, கிழக்குப் பகுதி கடற்கரையில் இடம்பெறும் கூட்டு ஆய்வில் ஜெ எஸ் 05, ஜெ எஸ் 06 பகுதிகளில் ஒரு பிரெஞ்சு நிறுவனமான  ‘டொடால்’ நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
அதுபோலவே, இலங்கைப் பகுதிகளில் மேலும் எண்ணை ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில்  ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கைகளை தற்போது பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
முடிவு
முடிவாக பெற்றோலிய தொழிற்துறையில் வினைத்திறனுடன் செய்றபடுத்த பிரதியமைச்சர், அமைச்சின் செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஊPளுவுடு நிறுவனம் தலைவர்கள், பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலக ஆணையாளர் உட்பட அதிகாரிகளின் அர்பணிப்பபு மற்றும் ஓத்துழைப்புடன் பெற்றோலிய வளத்துறையை வலுவடையவும் வளர்ச்சியடையவும் நான் கடமைப்பட்டள்ளேன்.
எனது முழு உரையையும் நிறைவுசெய்வதோடு இதனை அன்சாட் செய்யுமாறு சபைக்கு வேண்டுகோள்விடுக்கின்றேன்.
பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு காரணம்
• ஐ.ழு.ஊ யினால் கொண்டுவரப்பட்ட தரமற்ற எண்ணைக் கப்பல்.
• நவஸ்கா லேடி என்ற கப்பல் வரத் தாமதித்தமை.
(நவம்பர் 1 திகதி வரவிருந்த கப்பல் 8ஆம் திகதி வந்தமை).
• சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம் செயற்படாமல் போனமை.
• ளு.ஆ.ளு குறுஞ்செய்தியினால் மக்கள் குழப்பமடைந்து எரிபொருள் நுகர்வு வீதம் அதிகரித்தமை.
ஸ்பொட் டெண்டர்(ஒப்பந்தம்)
கடந்த காலங்களில் ஒரே ஒரு நிறுவனத்தில்  தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சிலவேலைகளில் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்களிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஒரு ஒப்பந்ததாரருக்கே இவ்வொப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையால் ஒரு எண்ணை மாபியாவே உருவாகியுள்ளது. இதனால் அவர்களிடம் அதிகாரமிருந்தது அவர்கள் கொண்டுவரும் எண்ணையை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய.
இது எமது நாட்டின் சக்தி வளப்பாதுகாப்புக்கு ஏற்பட்ட ஒரு அச்சுரத்தலாகும்.
இதனால் நாங்கள் ஒரு சரியான வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
அதுதொடர்பாக் சரத் அமுனுகம அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை உபகுழுவின் யோசைனைக்கமைவாக நீண்டகால ஒப்பந்த நடைமுறையை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்