குட்டித் தேர்தலில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் போட்டி!

2018 ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டியிடவுள்ளன.
தமது அரசியல் பயணத்தை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிக்கும் நோக்கிலேயே குட்டித் தேர்தலில் குதிக்கும் முடிவை வாரிசுகள் எடுத்துள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட மேலும் சில கட்சிகளின் பட்டியலின் கீழேயே அரசியல்வாதிகளின் வாரிசுகளும், உறவினர்களும் இவ்வாறு போட்டியிடவுள்ளனர் என அறியமுடிகின்றது.
அதேவேளை, முக்கிய சில தொழிலதிபர்களின் பிள்ளைகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்