ஆசனப் பங்கீட்டுப் பேச்சை இறுதிப்படுத்தியது இ.தொ.கா.! -இரத்தினபுரி, பதுளையில் ‘வெற்றிலை’; நுவரெலியா, கொழும்பில் ‘சேவல்’

ஆசனப் பங்கீட்டுப் பேச்சை இறுதிப்படுத்தியது இ.தொ.கா.! -இரத்தினபுரி, பதுளையில் ‘வெற்றிலை’; நுவரெலியா, கொழும்பில் ‘சேவல்’
நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கத் தீர்மானித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் கூட்டணியாகப் போட்டியிடவுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்ற சந்திப்புகளையடுத்தே நேற்று இ.தொ.கா. இறுதி முடிவை எடுத்துள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குராங்கத்த, வலப்பன ஆகிய தொகுதிகளைத் தவிர ஏனைய இடங்களில் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ள இ.தொ.கா., கண்டி மாவட்டத்தில் பன்வில தொகுதியில் தனித்துக்= களமிறங்கவுள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அக்கட்சி தேர்தலைச் சந்திக்கவுள்ளது.
அத்துடன், கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்