பேச்சில் இணக்கம் ஏற்படும்! கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும்!! – சுமந்திரன் நம்பிக்கை 

பேச்சில் இணக்கம் ஏற்படும்! கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும்!! – சுமந்திரன் நம்பிக்கை 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடனான பேச்சில் இணக்கம் ஏற்பட்டு கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும் எனும் நம்பிக்கை தனக்கு உண்டு என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பங்காளிக் கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும். ஆசனப் பங்கீட்டுக்காக  கூட்டமைப்பு பிளவுபட்டது; பிரிந்து சென்றது என இருக்கக்கூடாது.
முதாலாம், இரண்டாம் சுற்றுப் பேச்சில் இணக்கம் ஏற்படவில்லை. ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பாடு இருந்தது. கடந்த 5ஆம் திகதி இரவு ரெலோ கூடி தமிழரசுக் கட்சியுடன்  இணையமாட்டோம் என அறிவித்தது,
அந்நிலையில், ரெலோ கட்சியின் தலைவர் நேற்றுப் புதன்கிழமை என்னோடு இரண்டு மணி நேரம் பேசினார். அதில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. பிரச்சினைகளை  சமுகமாகத் தீர்க்க முயல்கின்றோம்.
அனைவருடன் கலந்தாலோசித்து நாளை வெள்ளிக்கிழமை மதியத்திற்குள் பேசி முடிப்போம். அந்தப் பேச்சில் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்தே பயணிப்போம் என நம்புகின்றேன்.
ரெலோவுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டைத் தீர்த்த பின்னர் புளொட்டுடன் பேசி சமரச முயற்சி மேற்கொளோம். சமரசமாகச் செல்வோம். சேர்ந்தே பயணிப்போம்” – என்றார்.
………………..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்