பஸிலின் கேமால் மஹிந்த அணிக்குள் குழப்பம்!

பஸிலின் கேமால் மஹிந்த அணிக்குள் குழப்பம்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பஸில் ராஜபக்ஷவின் ஆதிக்கம் கோலோச்சியுள்ளதால் மஹிந்த அணியான பொது எதிரணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து பிரிந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்குச்  சார்பான கட்சிகள், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தாமரை மொட்டு சின்னத்திலேயே களம்காணவுள்ளன.
எனினும், தேர்தலை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகளை பஸில் ராஜபக்ஷ தன்னிச்சையான முறையில் செய்துவருகிறார் என்றும், பங்காளிக் கட்சிகளுடன் ஆலோசனைப் பெறாமலேயே வேட்புமனு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றும், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
இந்த மோதலின் வெளிப்பாடாகவே ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தினேஷ் குணவர்தன பங்கேற்றார் எனவும், பதுளை  கூட்டத்தை விமல் வீரவன்ஸ புறக்கணித்தார் எனவும் கூறப்படுகின்றது.
………

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்