மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா…

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா…

மட்/ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரியின் 2016ம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பணிப்பாளர் எந்திரி எ.டி. கமலநாதன், விசேட அதிதிகளாக சிரேஸ் ஊடகவியலாளரும் பாடசாலையின் பழைய மாணவருமான பூ. சீவகன் மற்றும் மண்முனை வடக்கு கோட்டைக் கல்விப் பணிப்பாளர் கே. அருட்பிரகாசம், அழைப்பு அதிதிகளாக ஆனைப்பந்தியான் சமுக நற்பணி மன்றத்தின் தலைவர் மு. துதீஸ்வரன், புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தின் சிரேஸ்ட தலைவர் அ. கிருரஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெறறதுடன், கடந்த வருடத்திற்கான சிறந்த வகுப்பு மாணவர்கள், பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி, விளையாட்டு, மற்றும் இடைப்பாடவிதான செயற்பாடுகள், சிறந்த பாடசாலை மாணவி போன்ற பிரிவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வெறறிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்