மோட்டார் சைக்கிளில் 10 கிரேம் கேரளா கஞ்சாவை கொண்டு வந்த சந்தேக நபர் கைது..

(அப்துல்சலாம் யாசீம்)

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புஹாரியடி சந்தியில் மோட்டார் சைக்கிளில் 10 கிரேம் கேரளா கஞ்சாவை கொண்டு வந்த சந்தேக நபரை இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா ரஹ்மானிய்யா பகுதியைச்சேர்ந்த இமாமுதீன் முகம்மது இஸ்லாம் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து  அச்சந்தேக நபரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 10 கிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும்  கைது செய்யப்பட்ட நபரை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.ஜனூஷன் தெரிவித்தார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்