62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயற்சித்த வாலிபர் மரணம்!

சீனாவில் 62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய முயன்ற வாலிபர் தவறி விழுந்து மரணமான வீடியோ இணயத்தளத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களில் ஏறி சாகசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அத்துடன் அவற்றை வீடியோ எடுத்து சீன இணையத்தளங்களில் பதிவுசெய்து வந்துள்ளார். அவரின் சாகசங்களை கண்டு மக்கள் அவரை சீனாவின் சூப்பர்மான் என அழைத்தனர்.

ஆனால் அவருடைய சாகச முயற்சியே தற்போது அவருடைய மரணத்திற்கும் வழி வகுத்துள்ளது. குறித்த இளைஞர் சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தில் ஏறி சாகசம் செய்ய தயாரானார். அதை வீடியோ எடுக்கவும் அனைவரும் தயாராகினர். இந்நிலையில் யாங்கிங் கட்டிடத்தில் முழுமையாக ஏறி இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். அந் நிலையில் சில நிமிடங்களில் தவறுதலாக கை நழுவி கீழே விழுந்து மிகவும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

யாங்கிங் உயரமான கட்டிடங்களின் மேலே நின்று செல்பி எடுப்பது, பாலத்தின் முனையில் அமர்ந்து புகைப்படம் எடுத்து அவற்றை இணையங்களில் பதிவுசெய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந் நிலையில் அவருடைய இந்த மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்