ரஜினியின் மறு உருவமாக ஆர்யா?

ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தை ரசிகர்கள் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். அந்தளவிற்கு, அப்படத்தில் ரஜினியின் நடிப்பு இருந்தது என்று சொன்னால் மிகையில்லை.

ஞாபக மறதி உள்ளதாக அதில் நடித்துள்ள ரஜினி, வேட்டி அணியாமல் வீதி வரை வந்து, அதகளப்படுத்தியிருப்பார். ரஜினியின் பிறந்த தினமான இன்று இதை ஏன் ஞாபகப்படுத்துகின்றோம் என்று தானே நினைக்கிறீர்கள்… காரணம் இருக்கின்றது.

‘ஹர ஹர மகாதேவகி’ படத்தை தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘கஜினிகாந்த்’ என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, வனமகன் படத்தில் அறிமுகமான சாயிஷா சைகல் கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று நடிகர் ஆர்யாவின் பிறந்த நாள். இன்று ரஜினியின் பிறந்த நாள். இதனையொட்டி நேற்று இரவு 11.59 மணிக்கு கஜினிகாந்த் படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த போஸ்டர், ரஜினி நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் ரஜினி தோன்றுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்