அவுஸ்ரேலியாவிற்குச் சென்ற இந்திய மாணவி கடலில் மூழ்கி பலி!

இந்தியாவில் இருந்து தெற்கு அவுஸ்ரேலியாவிற்கு, விளையாட்டு போட்டிக்காக சென்றிருந்த மாணவியின் சடலம் அங்குள்ள கடற்கரையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டில் பங்குபற்றுவதற்காக, அவுஸ்ரேலியா சென்ற 15 வயதுடைய மாணவியின் சடலமே, இன்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டது.

குறித்த மாணவி உட்பட மொத்தம் நான்கு மாணவிகள், அங்குள்ள கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதன் போது கடலில் மூழ்கிய மாணவிகள் நீண்ட நேரமாகியும் வெளியே வராதமையினால், அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து, அவர்களை தேடும் பணி இடம்பெற்றது.

இந்நிலையில், இன்று காலை அக்கடற்கரையின் ஒரு பகுதியில் நீரில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, அங்கு தேடுதல் மேற்கொண்ட கடற்படை மாணவி ஒருவரின் சடலத்தை கண்டெடுத்தனர். அத்தோடு, ஏனைய மூவரையும் உயிருக்கு போராடும் நிலையில் மீட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்