கிளிநொச்சியில் தொடர்ச்சியாக  வியாபார நிலையங்கள் உடைக்கப்படுகின்றன.

கிளிநொச்சி நகரில் அன்மைக் காலமாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருடப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களே உடைக்கப்பட்டு வருகின்றன. நள்ளிரவில் வியாபார நிலையங்களை உடைக்கும் திருடர்கள்  பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிச் செல்கின்றனர்.  இதில் அதிகளவு பணத்தையே எடுத்துச் சென்றுள்ளனா் தெரிவிக்கப்படுகின்றது.
கனகபுரம் வீதியில் உள்ள வியாபார நிலையங்களில் சமீப காலமாக பதினைந்துக்கு மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. இதில் பலர் கிளிநொச்சி  காவல்துறை  நிலையத்தில்  முறைப்பாடு  பதிவு செய்துள்ள போதும் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை.
நேற்றைய தினமும் கனகபுரம் வீதியில் அமைந்துள்ள தொலைதொடர்பு நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு 25 ரூபா பணம், நான்கு தொலைபேசிகள்,   தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்