இலங்கையில் மீண்டும் பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படும்?

இலங்கையில் மீண்டும் பெற்றோலிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட பேச்சு நடத்தி வருகின்றனர். திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை இந்தியாவிற்கு குத்தகை அடிப்படையில் வழங்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் சங்கத்தின் தலைவரான டீ.ஜே ராஜகருணா தெரிவித்தார்.

இதேவேளை ஏற்கனவே நிலவிய பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்