பசுவின் வாயில் நாட்டு வெடிகுண்டு வைத்த கொடூரர்கள்

மத்திய பிரதேஸில் ஏழை விவசாயின் பசுவின் வாயில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளனர் சில சமூக விரோதிகள்.

ஆனால் இந்த தகவலை வெளியிட்டால் மீண்டும் தேசிய அளவில் பேசப்படும் செய்தியாகி விடும் என்று மூடி மறைக்கப்பட்டு வருகிறது.

இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சட்ட விதிமுறைகள் தான்.

விலங்குகளை கொடுமைப்படுத்துவோருக்கு தற்போதைய சட்டப்படி அதிகபட்சமாக ரூ.50 மட்டுமே அபராதம் விதிக்க முடியும்.

எனவே, விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1960-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு சட்டப் பிரிவு 11-ன் கீழ் விலங்குகளை அடிப்பது, அதிக பாரத்தை ஏற்றுவது, கொடுமைப் படுத்துவது உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டப்பிரிவில் குறிப்பிட்டுள்ள படி விலங்குகளை கொடுமைப் படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது முறையாகவும் விலங்கை கொடுமைப்படுத்துவது தெரியவந்தால் அதிகபட்சமாக ரூ.100 அபராதம் அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்த தண்டனை மிக மிகக் குறைவு. எனவே, இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இன்றைக்கு பல நாடுகளில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

ஆனால், இந்தியா வில் விலங்குகளின் நலனுக்காக சட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது இல்லை.

போலீஸாரும் இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இதன் காரணமாகவே தண்டனை பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

ஆனால், 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 429-ன் கீழ் விலங்குகளை கொன்றாலோ, கொடுமைப்படுத்தினாலோ 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும்.

அந்த சட்டத்தில் இருந்ததுபோல, விலங்குகளை சித்ரவதை செய்வோருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்