காமெடி நடிகர் வடிவேலுவின், மகனை திருமணம் செய்துள்ள பெண் யார் தெரியுமா..?

தன் கடந்த கால வாழ்க்கையை மறக்காத வடிவேலு, தன் மகனுக்கு ஏழ்மையான பெண்ணை தேடியுள்ளார்.

தமிழ் சினிமாவில், கொடி கட்டிப் பறந்தவர் நடிகர் வடிவேலு. கடந்த சட்டசபை எலெக்க்ஷனில் ஏற்பட்ட சில இன்னல்களால்  சினிமாவில் இருந்து ஓரங்கட்டபட்டாலும் இன்றும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார்.
ஏழ்மையில் பல சிரமங்களை சந்தித்தவர் நடிகர் வடிவேலு. சினிமா மூலம் வசதியான வாழ்க்கை அமைந்த பிறகும், தன் சொந்த ஊர், உறவுகளுடனான தொடர்பில் அவர் விலகவில்லை.
சில மாதங்களுக்கு முன், வடிவேலு மகன் சுப்ரமணி  திருமணம், அவரது சொந்த ஊரில் ஆடம்பரம் இன்றி நடந்தது.
சினிமாக்காரர்கள் ஒருவர் கூட கண்ணுக்கு தென்படவில்லை; உறவினர்கள் மட்டுமே..சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரி தான் மணப்பெண்.
அவரது தந்தை வேல்முருகன், பந்தல் வேலை பார்க்கும் சாதாரண கூலித்தொழிலாளி. இவர்கள் கூரை வீட்டில் வசிக்கும் குடும்பம்.
பெண் கூரை வீட்டில் வசிக்க வேண்டும் என்பது. வடிவேலுவின் கட்டாய கண்டிஷன். திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் தான் ஏற்பதாகவும், பெண்ணை மட்டும் அனுப்பி வைக்குமாறும் வடிவேலு கூறியுள்ளார்
வசதி வந்தபின், கடந்த காலத்தை மறப்பவர்களுக்கு, வடிவேலுவின் உயர்ந்த செயல் சிறந்த பாடம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்