யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒன்பது கட்சிகள்.

யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஒன்பது கட்சிகள்.

யாழ். சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிட ஒன்பது அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் சகல வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் இன்று நண்பகலுடன் நிறைவடைந்த நிலையில் சகல கட்சிகளுக்குமான கூட்டம் இன்று நண்பகல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் ம.அகிலன் தலைமையில் இடம்பெற்றது.

அதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலகர்,

வேட்புமனுக்களை தாக்கல் செய்த ஒன்பது கட்சிகளின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்