சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார்

சுனாமியில் உயிரிழந்த மனைவி 13 வருடங்களின் பின்னர் கணவரையும் கடலுக்கே பலியாக்கினார்

தங்காலை மாவெல்ல கடலில் மூழ்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துஷான் புதா 01 என்ற பெயரை கொண்ட மீன்பிடி படகில், நேற்று முன்தினம் நான்கு மீனவர்களுடன் கடலுக்கு சென்றுள்ளார்.

சென்றதன் பின்னர் செயற்கை கோள் இயங்காமையினால், கல்பொக்க பகுதிக்கு தனது படகினை செலுத்தியதோடு 200 மீற்றர் தொலைவில் படகு நங்கூரமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகிலிருந்து நேற்றைய தினம் கடல் கரைக்கு நீந்தி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் போதே 45 வயதுடைய பிரியதர்ஷன வீரதுங்க நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையை தாக்கிய ஆழிப்பேரலையில் இவ்வுலகத்தை விட்டு விடைபெற்றவர்களாவர்.

இந்நிலையில், சாமிகா என்ற தனது 15 வயது மகளுடன் குறித்த நபர் வாழ்ந்து வந்துள்ளதாக எது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்த குறித்த மீனவர் நன்கு நீந்த தெரிந்தவர் எனவும் கரைசேர்ந்த சக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்