சிந்துசா தவரத்தினத்தின் ஓவியக்கண்காட்சி.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழக கற்புல தொழிநுட்பத்துறையில் , இறுதி ஆண்டில் கல்விகற்கும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஓவியங்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்வுகள் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் குறித்த பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் சிந்துசா தவதத்தினத்தின் கைவண்ணத்தில் உருவான INFINITY PAINTING கடந்த யுத்த இழப்புகளும் யுத்த சூழ்நிலையில் சிறார்கள் அனுபவித்த துன்பியல் வடுக்களை சுமந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தும் ஓவியக்கண்காட்சி 15.12.2017 இன்று மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கர். விரிவுரையாளர்களான புஸ்பகாந்தன், மோகனதாஸ், செந்தூரன், பிரியதர்சினி, பீ.ரூபநீதன் திவ்யரூபசர்மா, அசல்யா, மற்றும் கல்லூரியின் மாணவர்களும் நண்பர்களும் கலந்துகொண்டு கண்காட்சியை சிறப்பித்தனர்.

குறித்த கண்காட்சி எதிர்வரும் ( திங்கள் செவ்வாய் ஆகிய தினங்களிலும்) 18, 19 ஆகிய திகதிகளிலும் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்