க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தமிழ் மொழிப் பாடத்தினால் குழம்பிய மாணவர்கள்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தமிழ் மொழிப் பாடத்தினால் குழம்பிய மாணவர்கள்!

நடைபெற்றுவருகின்ற க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சை­யின் தமிழ் மொழிப் பாடத்­தில் இடம்­பெற்ற கட்­டாய வினா ஒன்­றில் தவ­றான மேற்­கோள் காட்டப்பட்டுள்ளமை யால் மாண­வர்­கள் மத்­தி­யில் குழப்­பம் ஏற்­பட்­டது.

இது தொடர்­பில் இலங்­கைப் பரீட்­சைத் திணைக்­க­ளம் சரி­யான மேற்­பார்வை செய்­யா­மல் பரீட்சை வினாத்­தாளை வெளி­யிட்­டமை தொடர்­பில் துறை சார்ந்த பேரா­சி­ரி­யர்­கள் ஆசி­ரி­யர்­கள் விச­னம் வெளி­யிட்­டுள்­ள­னர்

க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சை­யின் தமிழ்ப் பா­டம் கடந்த புதன்­கி­ழமை நாடு முழு­வ­தும் இடம்­பெற்­றது.

இதில் புதிய பாடத்­திட்­டம் பகுதி மூன்­றில் முத­லா­வது வினா­வில் உரோ­மன் இலக்­கம் 9 ஆவது கேள்­வி­யில் தத்தை விடு­தூது என்­பது தி. த. கன­க­சுந்­த­ரம்­பிள்ளை இயற்­றிய செய்­யு­ளா­கும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
தத்தை என்­ப­தன் பொருள் யாது? தத்­தை­விடு தூதி­னூ­டாக ஆசி­ரி­யர் யாரு­டைய விடு­தலை பற்றி குறிப்­பி­டு­கி­றார்? என கேள்வி கேட்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் தத்­தை­வி­டு­தூது தி.த.சர­வ­ண­ முத்து பிள்­ளை­யால் எழு­தப்­பட்­டது.

இதைத் துறை சார்ந்த பேரா­சி­ரி­யர்­க­ளும் உறு­திப்­ப­டுத்­தி­னர். மாண­வர்­க­ளின் பாடத்­திட்­டத்­தி­லும் தத்­தை­வி­டு­தூ­தின் ஆசி­ரி­யர் தி.த.சர­வ­ண­ முத்­து­பிள்ளை என்றே தரப்­பட்­டுள்­ளது. இத­னால் பரீட்சை எழு­திய மாண­வர்­கள் குழப்­ப­ம­டைந்துள்ளனர்.

விட­யம் தொடர்­பில் பரீட்­சைத் திணைக்­க­ளம் குழப்­ப­ம­டைந்த மாண­வர்­க­ளுக்­கான பொறுப்பை ஏற்று தவ­றைத் திருத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என அவர்­கள் மேலும் தெரி­வித்­த­னர்.

அத்­து­டன் தி.த சர­வ­ண­முத்­துப்­பிள்ளை, தி.த.கன­க­சுந்­த­ரம்­பிள்ளை ஆகி­யோர் சகோ­த­ரர்­கள் என­வும் ஏன் இவ்­வாறு ஒரு தவ­றான தக­வலை பரீட்­சைத் திணைக்­க­ளம் வழங்­கி­யது எனப் பல­ரும் கேள்வி எழுப்­பி­யுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்