பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக நான்காவது வருடமும் கனடா ரஜீவ் அவர்கள் உதவிகளை வழங்கியிருந்தார்.

நேற்றைய தினம் தனது பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக நான்காவது வருடமும் கனடா ரஜீவ் அவர்கள் இம்முறையும் ஆரபி நிதியம் ஊடாக மிகச்சிறப்பான பொருத்தமான உதவிகளை வழங்கியிருந்தார்.

நேற்றைய தினம் வறுமைக்கோட்டுக்குள் திறமையோடு கல்வியில் சிறந்து விளங்கும் தேர்ந்தெடுக்கப்படட பதினொரு சிறார்களுக்கு வரும் புதிய ஆண்டு முழுவதற்கும் தேவையான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பைகளை அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்கியிருந்தோம் ,அடுத்து தென்மராட்ச்சி பகுதியில் வாழும் எம் மண்ணுக்காக போராடி விழுப்புண்களோடு வாழும் முன்னாள் போராளி அண்ணன் ஒருவருக்கு சுயதொழில் முயற்சிக்காக குறித்ததொரு பெறுமதியான பணத்தொகையும் , மாலுசந்தி பரமானந்தா ஆச்சிரமத்தில் மதியம் அன்னதானமும் வழங்கியிருந்தோம் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்