கிளிநொச்சியில் நத்தார் இன்னிசை வழிபாடு.

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது.

தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் வன்னி பிராந்திய ஒன்றிணைந்த நத்தார் இன்னிசை வழிபாடு நேற்று இடம்பெற்றது. முறிகண்டி தென்னிந்திய திருச்சபையின் திறந்த வெளி அரங்கில் இடம்பெற்ற குறித்த நிகழ்வினை புனித பவுல் நற்செய்தி பணிக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திருச்சபை பாடகர் குழுவினர்கள் நத்தார் பாடல்களை பாடினர். நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதீனத்தின் பேராயர் அதி வண கலாநிதி டி எஸ் தியாகராஜா சிறப்பருளுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் யாழ்ப்பாண கல்லூரி முதல்வர் டி எஸ் சொலமன், பிலிப்பதெனியா இறையியல் கல்லூரி மாணவர்கள், தென்னிந்திய திருச்சபை குருவானவர்கள், திருச்சபை பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வழிபாட்டினை தொடர்ந்து பிள்ளைகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்