விடுமுறையிலும் படி மன

விடுமுறை கொடுத்தது அரசு- நீ
விளையாடு ஓய்வெடு என்று
நடைமுறை தேடிப் பார்த்தால்
நம்ம மம்மிமார் அனுப்புறார் டியூஷன்

ஓ எல் எழுதுபவர் தவிர
உள்ள மற்றவர்க்கெல்லாம்
ஓய்வு எடுக்க முடியும் -ஆனால்
உம்மா விடமாட்டார் சும்மா.

இரண்டாம் வகுப்புப் பாலகன்
இங்கிலீஸ் வகுப்புக்குப் போறான்
விரட்டி அனுப்புறார் உம்மா- பக்கத்து
வீட்டுப் பையனும் போறானாம்

கிளியின் சிறகை வெட்டி
கிரீடம் அதற்கு சூட்டி
தள தள தங்கக் கூட்டில்
வளர்ப்பதால் கிளிக்கு மகிழ்வா?

கூடணும் ஓடணும் பிள்ளை
பாடணும் பழகணும் நல்லா.
பாடம் படித்தல் மட்டுமா
பக்குவமாக்கும் பிள்ளையை?

எட்டு வயதில் செய்வதை
எழுபது வயதிலா செய்வான்?
பட்டாம் பூச்சியை பிடித்து
கட்டி தேன் ஊட்டல் சரியா?

தனியார் வகுப்பு செல்வதும்
தந்த ஹோம் வேர்க் செய்வதும்
இனி அந்தப் பிஞ்சுப் பிள்ளை
எப்படி அனுபவிக்கும் லீவை?

புத்தகம் கொப்பியை மூடி
புறாவாய்ப் பறக்க விடுவோம்
இந்த ஒரு மாதமேனும்
இருக்கட்டும் அவன் சுதந்திரமாய்.

Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்