அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தேட்ட வட்டாரத்தின் வெற்றி வேட்பாளரை ஆதரித்த கூட்டம்.

பைஷல் இஸ்மாயில் –

அம்பாறை மாவட்ட, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான புறத்தோட்டம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி. தீனுல்லாவை ஆதரித்து நேற்றிரவு (22) அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் குறித்த கட்சியில் பாலமுனை வட்டாரத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.முனாப், முன்னாள் நீதிபதி சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எல்.ஏ.கபூர், புறத்தோட்டம் வட்டாரத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் ஏ.பி. தீனுல்லா ஆகியோர் தங்களின் கருத்துக்களை புறத்தோட்ட மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்