ஞானசாராவின் ஆணவத்துக்கு ஆப்படிப்போமா…?

-எஸ். ஹமீத்.

தற்போதைய சூழலில் ஒரு வழிதான் இருக்கிறது. இது தற்காலிக வழியென்று இப்போதைக்குத் தெரிந்தாலும் காலப் போக்கில் இதுவே ஒரு நிரந்தர வழியாகவும் ஆகிவிடக் கூடும்.

ஹலால் விடயத்தில் ஆரம்பமானது ஞானசாராவின் கொட்டம். முஸ்லிம்கள் ஹலால் உணவை உட்கொள்ளக் கூடாது என்று தடைவிதிக்கப் பார்த்தார்; தோற்றுப் போனார்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணியக் கூடாது என்றார்; தோற்று, தோல்வியில் தொய்ந்து போனார்.

அல்லாஹ்வின் மாளிகைகளை கற்கள் வீசி உடைத்தும் குண்டுகள் வீசித் தகர்த்தும் வெறியாட்டம் ஆடினார். அப்போதும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமையுடன் ஓரணியிற் திரண்டு தம் எதிர்ப்புகளை வெளியிட மிகச் சிறிய காலம் ஓய்வெடுத்து ஒதுங்கி நின்றார்.

அதன் பின்னர், பள்ளிவாசல்களில் பன்றி இறைச்சியை இரத்தத்தோடு விட்டெறிந்து நமது மதக் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப் பார்த்தார். முஸ்லிம்கள் மீண்டும் ஒன்றுபட்டுக் கிளர்ந்தெழவே, அத்தகைய நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு ஓரம் போனார்.

தர்கா நகர்-அழுத்கமையைப் பற்ற வைத்தார். அப்பாவிகளைக் கொன்று அவர்களின் ஜனாஸாக்களில் குளிர் காய்ந்தார். இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மீண்டும் ஒன்று திரண்டது கண்டு சிறிது காலம் அடங்கிக் கிடந்தார்.

இந்த ஆட்சியில் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் அடியாட்கள் கொண்டு அக்கினிக்கு இரையாக்கினார்.

பள்ளிவாசலுக்குப் பெட்ரோல் குண்டுகள் வீசித் தாக்கினார்.

வில்பத்துவில் முஸ்லிம்கள் காணிகளை பிடித்திருப்பதாகச் சொல்லிக் கூப்பாடு போட்டார்; ஊர்வலம் போனார்.

மாயக்கள்ளி மலையில் முஸ்லிம்களின் காணியில் புத்தர் சிலையை வைத்தார்.  எல்லாம் வல்லம் ஏக இறைவனாம் அல்லாஹ்வைப் பகிரங்கமாக ‘லப்ப’ என்று மிக அசிங்கமாகத் தூஷித்தார்.

ஜிந்தோட்டைக் கலவரத்தை உக்கிரமடையச் செய்தார்.

இவ்வேளைகளிலெல்லாம் ஆண்மை மிக்க அமைச்சரான ரிசாத் பதியுதீன் போன்ற வெகு சிலரினால் எழுப்பப்பட்ட வன்மையான எதிர்ப்புக் குரலினாலும் சர்வதேசத்துக்கு விடயம் கொண்டு செல்லப்பட்டதனாலும் சிறிது காலம் பொத்திக் கொண்டிருந்தார். தான் வெகுவாகத் திருந்தி விட்டதாக அறிக்கை விட்டார். ஜம்மியத்துல் உலமா சபையுடன் தமது பிரதிநிதிகளுக்கூடாகப் பேச்சுவார்த்தைகள் நடாத்தினார்.

ஆனால், இதோ வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியிருக்கிறது. இப்போது இந்த வேதாளத்தின் கோரமான பற்களுக்குள் திரும்பவும் வில்பத்து அகப்பட்டிருக்கிறது; அரைபட்டுக் கொண்டிருக்கிறது.

இம்முறை வில்பத்து என்ற போர்வையில் அவர் குறி வைத்திருப்பது அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீனை.

முஸ்லிம்களுக்கெதிரான தனது எந்த நடவடிக்கைக்கும் உடனுக்குடன் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வது ரிசாத் என்பதுதான் ஞானசாராவுக்கிருக்கும் பெரும் தலைவலி. இந்தத் தலைவலி அவருக்குத் தீர வேண்டுமானால் ரிசாத் பதியுதீனை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ரிசாத் பதியுதீனை ஒழித்துவிட்டால், தான் விரும்பிய விதமாக இலங்கை முஸ்லிம்களை அவராற் பந்தாட முடியும். இலங்கை முஸ்லிம்களின் சொத்துக்களுக்கும் அவர்கள் உயிராக என்னும் இறையில்லங்களுக்கும் நெருப்பு வைக்க முடியும். காலக்கிரமத்தில் மியன்மார் முஸ்லிம்களுக்கு அசின் விராதுவின் கோஷ்டி இழைத்த பாரிய கொடுமைகளைப் போன்று இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் தான் கொடுமைகளையும் அக்கிரமத்தையும் இழைக்க முடியும்.

தனது கனவுகளுக்குத் தடையாக இருப்பவர் ரிசாத். இலங்கையிலிருந்து முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாகத் துடைத்தெறிவதற்கோ அல்லது அவர்களை ஒன்றுக்கும் உதவாத அடிமைச் சமூகமாக ஆக்குவதற்கோ பாரிய ஒரு சக்தியாக ஞானசாராவுக்குக் குறுக்கே நிற்பவர் ரிசாத். ஆக, ரிசாத்தை முதலில் தீர்த்துக் காட்டுவதே ஞானசாராவின் திட்டம்.

இந்தத் திட்டத்தை அமுல்படுத்தும் வேலையைத்தான் ஞானசார மிகக் கச்சிதமாகத் தற்போது ஆரம்பித்திருக்கிறார். கணக்காளர் நாயகத்தின் 200 ற்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் ஓரிரு பக்கங்களை மட்டும் கையில் வைத்துக் கொண்டு ரிசாத்துக்கெதிராக ஆங்கில, சிங்கள இனவாத ஊடகங்களை முடுக்கிவிட்டிருக்கிறார். அமைச்சர் பதவியிலிருந்து ரிசாத்தின் காதைப் பிடித்திழுத்து வெளியே போட வேண்டுமென்று கொக்கரிக்கிறார்.

இதற்கு இந்தக் கள்ள ஆட்சியின் கூட்டாளிகளான மைத்திரியும் ரணிலும் உடந்தையோ என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடி நக்கியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நயவஞ்சக, உள்குத்து நடவடிக்கைகளும் ஞானசாராவின் தற்போதைய நடவடிக்கைகளுக்குப் பக்கபலம் சேர்த்திருப்பதாகத் தெரிகிறது.

ஆனால், இவையத்தனையையும் முறியடிக்கும் ஒரு வாய்ப்பை நமக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வே தற்போது தந்துள்ளான். உண்மையான முஸ்லிம்களை சோதித்தாலும் கைவிடாத அந்த ரப்புல் ஆலமீன், ஞானசாராவையும் அவனது கூட்டத்தையும் மண் கௌவச் செய்யக் கூடிய ஓர் அரிய சந்தர்ப்பத்தையும் நமக்கேற்படுத்தியுள்ளான். அந்த வாய்ப்புதான், அந்த சந்தர்ப்பம்தான் எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தல்.

”ஒரு சமூகம் தானாகாத் திருந்தாதவரை அந்த சமூகத்தை அல்லாஹ் திருத்த மாட்டான்!” அல் குர் ஆன்.

இதற்கேற்ப, இந்தத் தேர்தலில் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களும் எந்தளவுக்கு அதிகபட்ச வாக்குகளைப் பெறுகிறார்களோ, அந்தளவுக்கு ஞானசாராவின் தலை கவிழும். ரிசாத்தின் வெற்றி அதிகரிக்க அதிகரிக்க ஞானசாராவினதும் அவரது சதிகாரக் கூட்டத்தினதும் கொட்டம் மிகப் பாரியளவில் அடங்கும். ரிசாத்தை முஸ்லிம் மக்களிடத்திலிருந்து அகற்ற முடியாது என்ற எண்ணமே ஞானசாராவுக்கும் அவரது வன்முறைக் குழுவினருக்கும் பெரும் ஆப்படிக்கும்.

இன்ஷா அல்லாஹ்…ஞானசாராவுக்கு அடிப்போமா ஆப்பு?

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்