நாடளாவிய ரீதியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

உலகளாவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகின்றன.

மலர்ந்துள்ள புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழில் உள்ள கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

இதன்படி, யாழ்.மறைமாவட்ட புதுவருட நள்ளிரவு ஆராதனை, மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்னம் அடிகளாரின் தலைமையில் புனித மரியன்னை தேவாலயத்தில் நடைபெற்றது.

மேலும், கல்முனை இருதயநாதர் தேவாலயத்தில் அருட்தந்தை அன்றனி லியோ அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதேபோல புத்தளம் மாவட்டத்திலும் உள்ள கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகள் இடம்பெற்றன.

புதுவருடத்தினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள் வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்திலும் இடம்பெற்றது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்