மொன்றியலில் பிளாஸ்டிக் பை பாவனைக்கு தடை

மொன்றியலில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான நேற்று (திங்கட்கிழமை) முதல் இத்தடை நடைமுறைக்கு வந்துள்ளது.

50 மைக்ரோனுக்கும் குறைவான தடிப்பு மற்றும் மற்றும் உக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக கடைகளில் பயன்படுத்தப்படும் மிகவும் மெல்லிய பைகளுக்கும் இறைச்சியை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் பைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி தடை நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் வர்த்தகர்களுக்கு ஆறு மாதகாலம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் தடையை மீறினால் தனிநபருக்கு ஆயிரம் டொலரும் நிறுவனத்திற்கு இரண்டாயிரம் டொலரும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை விக்டோரியா மாகாணத்திலும் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்