30 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் எங்குமே சாக்லேட் இருக்காது வெளியான அதிர்ச்சி தகவல்

30 ஆண்டுகளுக்கு பிறகு உலகில் எங்குமே சாக்லேட் இருக்காது வெளியான அதிர்ச்சி தகவல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருள் சாக்லேட்.

இதன் மூலப்பொருளாக., கொக்கோ மரங்களில் இருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் விளங்குகிறது.

இந்த கொக்கோ மரங்கள் ஆப்பரிக்க நாடுகளில்தான் அதிக அளவில் உள்ளன. உலகில் ஐம்பது சதவீத சாக்லேட் ஆப்பரிக்காவில் இருந்துதான் பெறப்படுகிறது.

இந்த நிலையில்., அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது அடுத்த முப்பது ஆண்டுகளில் சாக்லேட் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு காரணம்., கொக்கோ மரங்கள் வளர்வதற்கு அதிகப்படியான மழை தேவை. மற்ற மரங்களை போல தொழில்நுட்பத்தை கொண்டு கொக்கோ மரங்களை வளர்க்க முடியாது.

மழையின் அளவு குறைவதால் கொக்கோ மரங்களின் வளர்ச்சி குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் சாக்லேட் உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இயற்கையை பற்றி யாரும் கவலை படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்