இலங்கை வரும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை வரும் பிரித்தானியர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய பிரஜைகளை மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள பயண அறிவுறுத்தல் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த விடுமுறை காலத்தில் பயங்கரவாத தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்று. இலங்கையிலும், பயங்கரவாக தாக்குதல் அச்சம் காணப்படுகின்றது.

குறிப்பாக பயங்கரவாத தாக்குதல் ஏற்படக்கூடிய நாடுகளாக தாய்லாந்து முதல் மாலைதீவு பிலிப்பைன்ஸ் வரையான நாடுகள் காணப்படுகின்றன. இதில் இலங்கையும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.

இந்நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, சுற்றுலாப் பயணிகள் அதிகமுள்ள இடங்களை இலக்கு வைத்து தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

எனவே, பொது நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்