புதிய மைல்கல்லை தொட்டது அமேஷான் ப்ரைம் சேவை

புதிய மைல்கல்லை தொட்டது அமேஷான் ப்ரைம் சேவை

ஒன்லைன் ஊடாக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் அமேஷான் ஆனது முன்னணியில் திகழ்ந்து வருகின்றது.

இந்நிறுவனம் அமேஷான் ப்ரைம் எனும் கட்டணம் செலுத்திய சந்தாதாரர் சேவையினையும் வழங்கி வருகின்றது.

இவர்களுக்கு விரைவாகவும், இலவசமாகவும் பொருட்களை அனுப்பி வைக்கும்.

இச் சேவையை பெறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் இதுவரை இரகசியமாகவே வைத்திருக்கின்றது.

எனினும் 2017ம் ஆண்டில் தனது ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி சுமார் 5 பில்லியன் பொருட்களை விற்பனை செய்துள்ளது.

இதேவேளை முன்னைய வருடங்களை விடவும் 2017ம் ஆண்டில் அதிகளவு வாடிக்கையாளர்கள் அமேஷான் ப்ரைம் சேவையின் ஊடாக இணைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்