பிரித்தானியாவின் வீடற்ற நிலையை சமாளிக்க அதிரடி நடவடிக்கை

செயலற்ற வங்கி கணக்குகளிலிருந்து நூற்றுக்கணக்கான மில்லியன் பறிமுதல் செய்யப்பட்டு, பிரித்தானியாவில் வீடற்ற நிலையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அமைச்சரொருவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டு மற்றும் சிவில் சமூக அமைச்சரான டிரேசி குரோச் என்பவரே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயக்கப்படாமல் உள்ள வங்கிக் கணக்குகளில் 330 மில்லியன் பவுண்ட்கள் காணப்படுவதாக நிதி நிறுவனம் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தை கொண்டு வீடற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை இலக்குவைத்து வீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

செயலற்ற கணக்குகளிலுள்ள பணங்களை நல்ல காரியங்களுக்கு பன்படுத்துவதன் மூலம் நாடு முழுவதிலுமுள்ள சமூகத்தினரிடையே உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்