2017 ற்கான சிறந்த  சமூக ஆர்வாளர்களுக்கான சமாதான தூதுவர் விருது.

2017 ஆம் ஆண்டிக்கான சமாதான தூதுவருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கையின் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், பல உள்நாட்டு வெளிநாட்டைச்சேர்ந்த 18 சமூக ஆர்வாலர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதுகள் (Ambassador Award) வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதில் சமாதானம், மனித உரிமைகள், கல்வி, இளைஞர் அபிவிருத்தி, ஊடக சுதந்திரம் போன்றவற்றிற்க்கான  சிறந்த  சமூக ஆர்வாளர்களுக்கான சமாதான தூதுவர் விருது திரு. இல்ஹாம் மரைக்கார் அவர்களுக்கு 04.07.2017 அன்று பண்டாரநாயக்க  ஞாபகார்த்த மண்டபத்தில் சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி S .L . ரியாஸ் அவர்களினாலும், ஐக்கிய இராச்சியத்தின் ஐக்கிய நாட்டு சபையின் பிரதிநிதியான பேராசிரியர் டெனியல் கான் அவர்களின் வழிகாட்டலிலும் வழங்கி வைக்கப்பட்டதோடு , ஐக்கிய அமெரிக்காவின் பட்டைய சமாதான அபிவிருத்தி கற்கை நிலையத்துக்கான அங்கத்துவமும் வழங்கிவைக்கபட்டது.
மேலும் திரு. இல்ஹாம் மரைக்கார் அவர்கள், கொழும்பு அமேசான் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், மனித உரிமைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், புத்தளம் மற்றும் கொழும்பு சாஹிராக்கல்லூரிகளின் பழைய மாணவரும், சிரேஷ்ட விரிவுரையாளரும், உளவியல் ஆலோசகரும், கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலின் உயர் கல்வி ஆலோசகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு விஷேட அதிதிகளாக  முன்னால் அமைச்சர் ஏ .எல்.எம். அதாவுல்லாஹ், பணிப்பாளர் சமீர் யூனுஸ் மற்றும் கலாநிதி  டெக்ஸ்டர்  பெனேன்டோ விஷ்வம் பல்கலைக்கழக பணிப்பாளர், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்