காதலியை திருமணம் செய்த பிரபல கனேடிய நடிகை

காதலியை திருமணம் செய்த பிரபல கனேடிய நடிகை

கனடா நாட்டின் பிரபல நடிகையான Ellen Page தனது காதலியான Emma Portner-ஐ திருமணம் செய்து கொண்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டின் பிரபல நடிகையாக விளங்குபவர் 30 வயதான Ellen Page. இவருக்கும் 23 வயதுடைய நடனக் கலைஞரான Emma Portner என்னும் பெண்ணுக்கும் காதல் இருந்ததாக ஏற்கனவே கிசுகிசுக்கள் எழுந்தது.

அதன் பின்னர் அவர்கள் இருவரும் டேட்டிங் செல்வது போன்ற செயல்களின் மூலம் தாங்கள் காதலித்து வருவதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினர்.

இந்நிலையில் தாங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் Ellen Page தெரிவித்துள்ளார். அவர்களது திருமணம் தொடர்பாக பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் மேலும் பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவதை அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தின் மூலம் அவதானிக்க முடிகின்றது.

மேலும் இது தொடர்பாக Ellen Page தெரிவிக்கையில்:- இப்படி ஒரு அழகான பெண் என் வாழ்க்கை துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு சமந்தா தாமஸ் என்ற நடிகையை 18 மாதங்கள் காதலித்து பின்னர் பிரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்