ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும்: மக்ரோங்

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளின் போது ஐரோப்பிய ஒன்றியத்தில் மீதமுள்ள 27 உறுப்பு நாடுகளுக்கும் பாதகமான சூழ்நிலை ஏற்படாதவாறு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூட்டு நலன்மீது அக்கறை செலுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் எச்சரித்துள்ளார்.

தமது சொந்த நலன்களுக்காக ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையில், பிரெக்சிற்றை பயன்படுத்தினால் ஒட்டுமொத்த கண்டமும் பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மக்ரோங் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரிவினைகளை தவிர்ப்பது சரியான முறை என்று நான் கருதுகின்றேன். கூட்டு நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.ஒவ்வொருவரும் தனிப்பட்ட நலன்களை கொண்டிருக்க முடியும். ஒவ்வொருவரும் தமது சொந்த நலன்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிலேயே அக்கறை கொள்ள முடியும். ஆனால் அவ்வாறு நாம் செய்தால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமற்ற ஒரு சூழ்நிலை உருவாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்