ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு கனடா சுற்று சூழல் எச்சரிக்கை!

ரொறொன்ரோ பெரும்பாகம் மற்றும் மாகாணத்தின் பெரும்பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் கடுமையான குளிர் நிலைமை தென்படும் என கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சனிக்கிழமை தொடக்கம் வரை பல இடங்களில் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 30ஆக காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கனடா சுற்று சூழல் முன்னுரைத்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) நகரில் உயர் வெப்பநிலை -17 செல்சியஸ் ஆனால் -32 ஆக உணரப்படும்.
சனிக்கிழமை பகல் -17 செல்சியஸ் ஆனால் இரவில்-19 செல்சியஸ் ஆக வீழ்ச்சி அடையும் எனவும் கூறப்படுகின்றது.

இதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்