புதிய தேர்தல் முறை குறித்து 80 வீதமான வாக்காளர்களுக்கு தெளிவில்லை

புதிய தேர்தல் முறை குறித்து 80 வீதமான வாக்காளர்களுக்கு தெளிவில்லை

80 வீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறைமை பற்றி போதியளவு தெளிவு கிடையாது என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

சில வேட்பாளர்களுக்குக் கூட தேர்தல் முறைமை பற்றி தெளிவில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி வரையில் இரண்டாண்டுகளாக உள்ளுராட்சி மன்ற சட்டம் காலத்திற்கு காலம் திருத்தி அமைக்கப்பட்டது.

இதனால் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய கால அவகாசம் கிடைக்கவில்லை.

தேர்தல் முறைமை குறித்து செயலமர்வுகளை நடத்தும் போது பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு போதியளவு தெளிவில்லை என்பது தெரியவந்தது.

புதிய தேர்தல் முறைமை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசியல் கட்சிகள் போதியளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.

தேர்தல் ஆணைக்குழு, பெபரல் போன்ற அமைப்புக்களே தேர்தல் முறைமை பற்றி மக்களை தெளிவுபடுத்தி வருகின்றன.

எனினும் வாக்களிப்பது மிகவும் சுலபமானது, தனக்கு விருப்பான கட்சியின் சின்னத்திற்கு எதிரே வாக்காளர்கள் புள்ளடி இடுதல் போதுமானது.

எனவே வாக்குகள் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அபாயம் கிடையது என ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்