ரயிலில் மோதி ஒருவர் பலி

ரயிலில் மோதி ஒருவர் பலி

அளுத்கமையிலிருந்து மருதானை நோக்கிவந்த ரயிலில் மோதுண்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார் என்று பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள தண்டவாளத்தில் வைத்தே, குறித்த நபர் நேற்று ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர், 25 இருந்து 30 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார், சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்,  விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்