காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

ஏறாவூர் – புன்னைக்குடா கடலில் நீராடிய நிலையில் அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டு காணாமல் போன மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் அப்துல் ஸலாம் அஸ்பஹான் (வயது 16) எனும் மாணவனின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தை வசிப்பிடமாக கொண்ட இம்மாணவன் வெள்ளிக்கிழமை பிற்பகல் புன்னைக்குடா கடலில் நீராடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போயிருந்தார்.

உடனடியாக குறித்த மாணவனை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டனர். எனினும் காணாமல்போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்